போலி பத்திரபதிவு செய்யப்பட்டால் உடனடி ரத்து! அமைச்சர் எச்சரிக்கை!
தமிழகத்தில் போலி பத்திரபதிவு செய்யப்பட்ட பதிவுகள் ஆதாரத்துடன் கண்டறியபட்டால் ரத்து செய்யப்படும் என பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அம்பத்தூர் கிழக்கு பகுதி கொரட்டூர் பகுதி திமுக சார்பில் "உதிரத்தை கொடுத்து உதயத்தை வரவேற்போம்" எனும் தலைப்பில் மாபெரும் குருதிக்கொடை முகாம் நடைபெற்று வருகிறது. இந்த ரத்த தான முகாமில் சுமார் 300கும் மேற்பட்டோர் ரத்தம் வழங்கினர். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அம்பத்தூர் எம்எல்ஏ மண்டலக்குழு தலைவர் பி கே மூர்த்தி உள்ளிட்டோர் ரத்தம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
மேலும் படிக்க | எம்ஜிஆர் போல் பெரும் மாற்றத்தை உருவாக்குவார் உதயநிதி - திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள், போலி பத்திரப்பதிவு நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், போலியாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் ரத்து செய்து உரியவருக்கு பத்திரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, தற்பொழுது தமிழகத்தில் திருக்கோயில்களில் உழவாரப்பணி என்பது நடைபெற்று வருகிறது. கோவில்களுக்குள் உள்ள நகைகள் எல்லாம் ரூமில் மற்றும் ஸ்டோரேஜ் வைக்கப்பட்டுள்ளது நகைகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது.
மேலும் படிக்க | பிடிஆர் சிறப்பாக செயல்படுகிறார்! அமைச்சரை புகழ்ந்த மற்றொரு அமைச்சர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ