ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை எதிர்த்து சிபிஐ பதில் மனுத்தாக்கல்
ப. சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவுக்கு எதிராக சிபிஐ பதில் மனு தாக்கல்.
புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனு வரும் திங்கக்கிழமை (செப்டம்பர் 23) விசாரணைக்கு வருகிறது. அப்பொழுது டெல்லி திகார் சிறையில் இருக்கும் சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா? என்று எதிர்பார்த்த நிலையில், ப. சிதம்பரமத்தின் ஜாமீன் மனுக்கு எதிராக சிபிஐ பதில் மனு தாக்கல் செய்தது. அதில் எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனக் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா தொலைக்காட்சி நிறுவனம் 2007 ஆம் ஆண்டில் 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு பெற்றதில் விதிகள் மீறப்பட்டதாகவும், அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அதற்கு உதவி செய்ததாக கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு ப. சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.
அடுத்த நாள் அவரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தினர். 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனையடுத்து மீண்டும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி மீண்டும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தப்பட்டார் ப. சிதம்பரம், மேலும் 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. மீண்டும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி 2 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த திங்கக்கிழமை மீண்டும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் ஆஜார்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் செப்., 5 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது.
15 நாள் சிபிஐ காவல் முடிந்ததால், ப.சிதம்பரத்தை மீண்டும் செப்., 5 ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அன்று ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவு போட்டது. ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தின் உத்தரவு அடுத்து ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிந்ததால் மீண்டும் அவரை ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
இந்தநிலையில், ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக் கோரிய மனு செப்டம்பர் 23 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அந்த ஜாமீன் மனுவை எதிர்த்து சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த இரண்டு மனுவும் திங்கள்கிழமை விரசனைக்கு வர உள்ளது.