கஞ்சா நகரமாக மாறுகிறதா வேலூர் - கைகொடுக்குமா ஆப்ரேசன் 2.0?
வேலூரில் கஞ்சா வியாபாரம் தலைவிரித்தாடுகிறது. கட்டுக்குள் கொண்டுவர தூக்கத்தை இழந்துதவிக்கும் போலீசார் நிலைமை என்ன ?
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம்... பெங்களூர், ஆந்திரா, கேரளா, டெல்லி போன்ற பல்வேறு பெரு மாநிலங்களை இணைக்கும் ஒரு இணைப்பு ரயில் நிலையமாகும். மேலும் ஆந்திரா மாநிலத்தின் திறவுகோலாக இருப்பது காட்பாடி எல்லைப்பகுதியான கிறிஸ்டியான் பேட்டைதான்.
தற்போது அப்பகுதிகள் கஞ்சா பரிமாற்றத்திற்கான மிகச் சிறந்த இடமாக மாறி வருகிறது. அதிலும் காட்பாடியை மையமாக வைத்த ரயில் வழியாக பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பரிமாற்றம் செய்யப்படுகிறது. அவை காட்பாடி வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இதனைப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அவ்வப்போது பறிமுதல் செய்து வந்தாலும் போதைப்பொருட்களின் விற்பனையை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவருவது என்பது முடியாத ஒன்றாகவே நீடித்து வருகிறது.
சமீபத்தில் காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு கஞ்சா போதைப் உள்ளிட்ட போதை பொருளை தடுக்க ஆபரேஷன் 2.0 என்ற தனி திட்டத்தை ஏற்படுத்தினார். அதன் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதன் விளைவாகத்தான் தமிழக-ஆந்திரா எல்லையில் தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ஆன்லைனில் போதை மாத்திரை விற்பனை: தலைச்சுற்ற வைக்கும் பகீர் பின்னணி!
இதற்கிடையே, வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அவர்களின் சீரிய முயற்சி காரணமாக சிம்பா என்னும் மோப்ப நாய்க்கு பயிற்சி அளித்து தற்பொழுது சிம்பாவும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.
பறிமுதல் செய்வதோடு விட்டுவிடாமல் கஞ்சா எங்கிருந்து கடத்தப்பட்டு வருகிறது இது எங்கு விநியோகம் செய்ய எடுத்துச் செல்லப் படுகிறது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டால் மட்டுமே மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ இருக்கட்டும் ஆனால் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழித்தால்தான் வேலூர் மாவட்டத்தில் குற்றச்செயல்களைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதே நிதர்சனமான உண்மை. இதனால் சீரழியும் வாலிபர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு மையம் மூலம் ஆலோசனைகளை அழைத்து நல்வழிப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் படிக்க | வலிமை பட பாணியில் போதைபொருள் நெட்ஒர்க்கை பிடித்த சென்னை போலீஸ்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR