இந்தியாவின் HysIS செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!
இந்திய பூமி-வரைபட செயற்கைக்கோள் HysIS மற்றும் 8 நாடுகளின் 30 செயற்கைக் கோள்கள் ஆகியவற்றை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழு இன்று(வியாழக்கிழமை) காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது!
இந்திய பூமி-வரைபட செயற்கைக்கோள் HysIS மற்றும் 8 நாடுகளின் 30 செயற்கைக் கோள்கள் ஆகியவற்றை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழு இன்று(வியாழக்கிழமை) காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது!
இந்தியாவின் HysIS உள்பட 31 செயற்கைக் கோள்களுடன் PSLC C43 ராக்கெட், இன்று காலை 9.58 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான இறுதிக் கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்மரமாக ஈடுப்பட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேளாண்மை, வனப்பகுதி, கடலோர பகுதி, உள்நாட்டு நீர் நிலைகள், மண்வளம் மற்றும் ராணுவ உளவுப் பணிக்காக ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் (Hyperspectral Imaging) என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.
இதனுடன் வெளிநாடுகளைச் சேர்ந்த 30 சிறிய மற்றும் நானோ செயற்கைக்கோள்களும் PSLV C43 ராக்கெட் மூலம் இன்று காலை 9.58 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இறுதிக் கட்ட கண்காணிப்பில் விஞ்ஞானிகள் தொடங்கினர். இதற்கான 28 மணி நேர கவுண்டவுன் நேற்று காலை 5.58 மணிக்குத் தொடங்கியது.
PSLV C43 ராக்கெட்டில் அமெரிக்காவின் 23 செயற்கைக் கோள்களும், ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா உள்ளிட்ட நாடுகளின் 7 செயற்கைக் கோள்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் பூமியில் இருந்து 504 கிலோ மீட்டர் உயரத்திலும், HysIS செயற்கைக் கோள், பூமியில் இருந்து 636 கிலோ மீட்டர் உயரத்திலும் நிலைநிறுத்தப்படும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.