சென்னை: வருமான வரித் துறை (Income Tax Department), சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பல பகுதிகளில், சுமார் 200 ஏக்கர் பரப்பில் உள்ள, வி.கே சசிகலாவின் (VK Sasikala) சுமார் 65 பினாமி சொத்துகளை இணைத்துள்ளது. இவற்றின் மதிப்பு சுமார் 300 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணைக்கப்பட்ட சொத்துக்களில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடான வேதா நிலயத்திற்கு (Veda Nilayam) எதிரே போயஸ் கார்டனில் கட்டுமானத்தில் உள்ள ஒரு புதிய வீடும் அடங்கும்.


ஜெயலலிதாவின் குடியிருப்பு, அரசாங்க நினைவுச்சின்னமாக மாற்றப்படுகிறது. அனைத்து 65 சொத்துக்களும் 2003-05 ஆம் ஆண்டுகளில் சசிகால குடும்பத்தினரால் கையகப்படுத்தப்பட்டன. வருமான வரித் துறையின் சென்னை பிரிவு இந்த சொத்துக்களை பினாமி பரிவர்த்தனை (தடை) திருத்தச் சட்டம், 2016 இன் கீழ் இணைத்துள்ளது.


சொத்து வழக்கு தொடர்பாக பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, பினாமி நிறுவனம் (Benami Firm) மற்றும் சொத்துக்கள் அமைந்துள்ள பல்வேறு துணை பதிவாளர் அதிகாரிகள் ஆகியோருக்கு இணைப்பு அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன என்று வருமான வரி வட்டாரங்கள் தெரிவித்தன.


ALSO READ: சென்னையில் சமையல் மற்றும் வர்த்தக சிலிண்டர் விலை குறைந்தது; சில இடங்களில் அதிகரிப்பு


பினாமி நிறுவனமான ஸ்ரீ ஹரி சந்தனா எஸ்டேட்ஸ் போயஸ் கார்டன், ஆலந்தூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி மற்றும் ஸ்ரீபெரம்புத்தூர் ஆகிய இடங்களில் அமைத்துள்ள இந்த சொத்துக்களை வாங்கியதாக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த சொத்துக்களை வாங்கியுள்ள இந்த ஷெல் நிறுவனத்திற்கு, அவற்றை வாங்குவதற்கான எந்த தேவையோ வருமானமோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணைக்குப் பிறகு, நிறுவனம் சசிகலாவின் பினாமி என்று வருமான வரித் துறை கண்டறிந்துள்ளது. இணைக்கப்பட்ட சொத்துக்களில் வேதா நிலயம் எதிரே உள்ள ஒரு நிலமும் உள்ளது. இங்கு சசிகலாவிற்கான வீடு கட்டப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இது பின்னி மில்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது.


பணமதிப்பிழப்பு நடந்தபோது, சசிகலா 9 சொத்துகளுக்கு, 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான பினாமி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டார். பிப்ரவரி 2017 இல், சசிகலா, அவரது உறவினர்களான ஜே.இளவரசி மற்றும் வி.என்.சுதாகரன் ஆகியோருடன் சிறைக்குச் சென்றார். முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவும் குற்றம் சாட்டப்பட்டிருந்த 66.65 கோடி ரூபாய் டிஏ வழக்கில் சசிகலாவுக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. 


ALSO READ: தமிழகத்தில் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக நியமிக்கப்பட்டார் எம். வீரலட்சுமி!!