சென்னை மற்றும் கோவையில் சுமார் 74 இடங்களில் அதிரடியாக வருமானவரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மற்றும் கோவையில் உள்ள நகைக்கடைகள், ஜவுளிக்கடைகளில் விற்பனை விவரத்தை சரிவர தெரிவிக்காமல் வரி ஏய்ப்பு செய்து வருவதாக தெரிவித்து ரேவதி, லோட்டஸ் உள்பட பல்வேறு குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.


அதன்படி சென்னை பெரம்பூரில் இயங்கி வரும் ரேவதி குழும நிறுவனங்களான ரேவதி நகைக்கடை, ரேவதி சூப்பர் மார்க்கெட், ரேவதி பர்னிச்சர் மற்றும் பாத்திரக்கடை, ரேவதி துணிக்கடை ஆகியவற்றில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.



அதேப்போல், வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சென்னை சரவணா ஸ்டோர்ஸ், லோட்டஸ் குழுமம் மற்றும் ஜி ஸ்கொயர் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் சிறு சிறு நிறுவனங்கள் உள்பட சென்னையில் மட்டும் மொத்தம் 72 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


சென்னையில் நடைப்பெற்ற இந்த திடீர் சோதனையில் சுமார் 350 வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிகிறது. அதேவேலையில் கோவையில் 2 இடங்களில் நடைப்பெற்ற வருமான வரித்துறை சோதனையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுப்பட்டதாக தெரிகிறது.