மருத்துவ படிப்பிற்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவது அபத்தமானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் படிக்கும் 19 மாணவர்கள் தங்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி மருத்துவ படிப்பை நிறைவு செய்ய அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அவர்கள்... கருணை மதிப்பெண்கள் வழங்குவது குறித்து பல்கலைக்கழகம் தான் முடிவெடுக்க வேண்டும். மாணவர்கள் உரிமையாக கேட்க கூடாது என தெரிவித்துள்ளார். மேலும், மனித உயிர்களை காப்பாற்றும் மருத்து மாணவர்கள் கருணை மதிப்பெண்கள் எதிர்பார்பது ஆபத்தானது.


எனவே கருணை மதிப்பெண்கள் வழங்குவதை ரத்து செய்வது தொடர்பான விதிகளில் திருத்தம் கொண்டு வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கருணை மதிப்பெண் பெற்று மருத்துவராகும் நபர்களிடம் தங்களது உயிரை பணயம் வைக்க யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடுவதையும் தவிர்க்க வேண்டும் என தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.