திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நள்ளிரவில் அதிகாரிகள் குழு சோதனை நடத்த வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


இதற்கு அங்கிருந்த திமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அதிகாரிகளுடன் தொடர்ந்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.  இதனால் 4 மணிநேரம் வரை அதிகாரிகள் சோதனை நடத்த முடியாமல் காத்திருந்தனர்.  


இந்நிலையில் இன்று காலை 3 மணியளவில் சோதனை தொடங்கியது. வருமான வரி துறையினருடன், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்தி வருகின்றனர்.