ஜல்லிக்கட்டு: மதுரையில் சீமான் தொடர் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. மதுரையில் நேற்று நடந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போரட்டங்கள் நடத்தி வந்தனர்.
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. மதுரையில் நேற்று நடந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போரட்டங்கள் நடத்தி வந்தனர்.
இதில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசி, போராட்டக்காரர்களுக்கு ஆதரவை தெரிவித்தார்.
இந்நிலையில் மதுரையில் உள்ள பெரியார் சிலை முன்பு அமர்ந்து, சீமான் தனியாக இரவு 9 மணி முதல் தொடர் போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்தது.
போராட்டம் குறித்து சீமான் கூறுகையில்:-
ஜல்லிக்கட்டுக்காக நாளை வரை மதுரையில் தங்கி இருந்து போராடுவேன். மத்திய-மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் 21-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்துவேன் என்றார்.