ஜல்லிக்கட்டு: ஒன்று திரளும் மாணவர்கள்!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மாணவர்களும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மாணவர்களும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் இளைஞர்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 39 மணி நேரத்திற்கு மேலாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராடி வருகின்றனர்.
தமிழிக கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக வகுப்புக்களை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக சட்ட, பொறியியல், மருத்துவ கல்லூரிகள் மாணவர்களும் வகுப்புக்களை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
சென்னையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் மாணவர்களும், பொதுமக்களும் இணைந்து மனிதசங்கிலி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள இளைஞர்களையும் ஒருங்கிணைத்து போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த உள்ளதாகவும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.