சென்னை: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜல்லிக்கட்டு நடத்த கோரி மதுரையில் உள்ள 60 கிராமங்களில் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர்.


ஜல்லிக்கட்டுக்கு தடை வித்தித்து கடந்த 2014-ம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்தது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் எழுந்துள்ளனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டுமென்று கல்லூரி மாணவர்கள் , பொதுமக்கள் என அனைவரும் தற்பொழுது போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.


இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மதுரையில் உள்ள 60 கிராமங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வணிகர்களும், பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்து வரும் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்று வருகின்றனர்.