ஜெயா டிவி சிஇஓ விவேக்கிடம் வருமானவரி துறையினர் விசாரணை
வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை 5-வது நாளான இன்றுடன் நிறைவு. ஜெயா டிவி சிஇஓ விவேக்கை வருமானவரி துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
சென்னை மையமாக கொண்ட ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலம், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, இளவரசி மகன் விவேக் வீடுகளில் இன்றும் 5-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கடந்த 9-ம் தேதி ஆரம்பித்த வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை 5-வது நாளான இன்றுடன் நிறைவு பெற்றதாக தகவல் வந்துள்ளது. கிட்டத்தட்ட 190 இடங்களில் 2,000 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வருமான வரி கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால் தான் இந்த சோதனை நடைபெற்றது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சரிபார்க்கும் பணி நிறைவடைந்தவுடன் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், இன்று ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் சிஇஓ விவேக்கை விசாரணைக்காக வருமானவரி துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.