திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மூலமாக அதிமுக ஆட்சியை கலைக்க முயற்சித்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘‘கற்பனைக் கோட்டை கட்டுவதில் திமுகவிற்கு நிகர் யாரும் இல்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தாலும் இந்த மாநிலத்தில் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது. ஸ்டாலின் மருமகன் சபரீசன் மூலமாக அதிமுக ஆட்சியை கலைக்க முயற்சித்து வருவகிறார்.


7 பேர் விடுதலைக்காக மாநில அரசு தனது அதிகாரத்திற்கு உட்பட்டு இயன்றவரை முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆளுநரை இந்த விவகாரத்தில் கட்டாயப்படுத்த முடியாது. 50,000 வாக்குச்சாவடிகளில் 13 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு என்பது பிரச்னைக்குரிய விவகாரம் இல்லை. ஊடகங்கள் தான் அதனை பெரிதுபடுத்தி வருகின்றன’’.


தனிப்பட்ட ஒரு மாநிலத்திற்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கமுடியாது என்று மத்திய அமைச்சர் பிராகாஷ் ஜவ்டேகர் கருத்து குறித்த பதிலளித்த அவர், ‘‘பி.ஜே.பி யின் கொள்கையினை அமைச்சர் தெரிவித்திருக்கக்கூடும். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை’’  என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.