எம்ஜிஆர் நடித்து வெளிவந்த ’உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் வெளிவந்த ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சென்னை ராயபுரம் தொகுதியில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ஆளுங்கட்சியாக திமுக இருந்த போது உலகம் சுற்றும் வாலிபன் படம்  வெளியாகாமல் இருப்பதற்கு பல தடங்கல்களை தந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Minister TRB Raja: அமைச்சராக பொறுப்பேற்றார் டிஆர்பி ராஜா


அதனையும் மீறி படம் வெளியாக வெற்றிப்படமாக அமைந்தது. போஸ்டர் ஓட்டினால் கிழிப்பேன் என திமுக வினர் தெரிவித்தனர். போஸ்டர் ஒட்டாமல் வெற்றி படமாக அமைந்த ஒரே படம் உலகம் சுற்றுப் வாலிபன் படம் தான் என தெரிவித்தார். தமிழக மட்டுமல்ல உலகம் முழுவதும் எம்ஜிஆர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார். உலகம் சுற்றும் வாலிபன் வெளிவந்த பிறகு திண்டுக்கல் தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது என தெரிவித்தார். 


பால்வளத் துறை அமைச்சர் நாசருக்கு பால் ஊற்றி விட்டனர். தமாஷ் தர்பார் கூட்டத்தில் இன்னும் சிலர் உள்ளதாக தெரிவித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது பிடிஆர் போல பொருளாதார வள்ளுநர் இல்லை என தெரிவித்தனர். அறிவும், ஆற்றலிலும் சிறந்தவர் பிடிஆர் என தெரிவித்தனர். இப்போது அறிவும் ஆற்றலும் பழனிவேல் தியாகராஜனுக்கு இல்லையா? என ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். அவர் பேசியதாக ஆடியோ வெளியாகியது. அதில் 30 ஆயிரம் கோடி ஊழல் என பேசியது உண்மையாக தான் இருக்கும். ஆடியோ வெளியானதால் தான் அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது என முதல்வரே உறுதி படுத்துவதாக தான் உள்ளது என்றும் ஜெயக்குமார் கூறினார்.


முதல்வரும், பிடிஆரும் விளக்கம் கொடுத்தாலும் டம்மியாக தான் இப்போது வைக்கப்பட்டிருக்கிறார். ஜமின்தார் முறையில் திமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தனக்கு பின்னால் உதயநிதி ஸ்டாலின் வரவேண்டும் என்பதற்காகவே அதற்கேற்றார் போல் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். பிடிஆர், ஆவடி நாசர் ஆகியோரை அதிமுக விற்கு அழைப்பு விடுக்கவில்லை, ஆனால் வந்தால் அங்கீகரிப்போம்  என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். 


மேலும் படிக்க | TN Cabinet: அமைச்சரவையில் அதிரடி மாற்றம் - நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து பிடிஆர் விடுவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ