முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் தங்களது விரிவான விசாரணை அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தது. 608 பக்கங்கள் கொண்ட ஆறுமுகசாமியின் விசாரணை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதாவுக்கான சிகிச்சை பற்றிய உண்மை நிலையை அறிய விசாரணை தேவை என்று ஆணையம் இதில் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டப்பேரவையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து ஆணையம் விசாரணைக்கு பருந்துரைத்துள்ளது. 


மேலும் அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தாலும், அது நடக்கவில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


ஜெயலலிதா இறந்த நாள் மற்றும் இறந்த நேரத்தில் முரண்பாடு உள்ளதாகவும் சந்தேகங்கள் எழுகின்றன. ஜெயலலிதா 2016 டிசம்பர் 4ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள் இறந்தார் என சில சாட்சியங்கள் கூறுகின்றன. 2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது. ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதியே அவர் இறந்துவிட்டார் என அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. இதனால் ஜெயலலிதா மரணம் குறித்து அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 


நடந்தது என்ன?


அறிக்கையின் படி, ‘ஜெயலலிதா தனது இல்லத்தில் இரவு மயங்கி விழுந்ததார், உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது, உடல் பருமன், மாறுபட்ட உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், ஹைபோ தைராய்டிசம், வயிற்றுப்போக்குடன் எரிச்சல் கொண்ட குடல் மற்றும் மூச்சு குழாய் அலர்ஜி, போன்றவற்றால் பாதிப்பு என உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு 3 தினங்களுக்கு முன்பே அதிக காய்ச்சல் இருந்ததாகவும், மருத்துவர் சிவகுமார் ஆலோசனை படி மாத்திரைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவருக்கு வீட்னிலேயே மாஸ்க் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டது. உடனே மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டு, உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். முதற்கட்ட பரிசோதனைக்கு பிறகு ஐசியு வார்டுக்கு மாற்றம் செய்ய அழைத்து செல்லப்பட்ட போது ஸ்டெச்சரில் அவருக்கு சுயநினைவு வந்தது.


மேலும் படிக்க | இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் முக்கிய அறிக்கைகள்!


சசிகலா மற்றும் வீட்டில் உள்ள நபர்கள் ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் எவ்வித அசாதாரண அல்லது இயற்கைக்கு மாறான செயல்களில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை என அறிக்கை கூறுகிறது. அனுமதிக்கப்பட்டது முதல் இறக்கும் வரை ஆணையம் ஒவ்வொரு கட்டமாக விரிவாக விசாரித்தது. 


உடல் பருமன், மாறுபட்ட உயல் ரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், தைராய்டு,  எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, வயிற்றுப்போக்கு, மூச்சுக்குழாய் அலர்ஜி போன்றவற்றால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததை உறுதிபடுத்தியது ஆணையம். அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே  சிறுநீர் தொற்று ஏற்பட்டு செப்சிஸ் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இதய பாதிப்பும் ஏற்பட்டது. 


மேலும் படிக்க | தீண்டாமை இன்னும் பள்ளிகளில், கோவில்களில் தொடர்கிறது: கொதிக்கும் ஆர்.என்.ரவி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ