ஜெயலலிதா மறைவு: அதிர்ச்சியில் 470 பேர் உயிரை விட்டனர்
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மறைவுச் செய்தியை கேட்ட அதிர்ச்சியில் இதுவரை தமிழகம் முழுவதும் 470 பேர் உயிரிழந்துள்ளதாக அதிமுக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் ஜெயலலிதா அவர்கள் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா டிசெம்பர் 5-ம் தேதி இரவு 11:30 மணி அளவில் திடீர் மாரடைப்பால் காலமானார். இச்செய்தி கேட்ட பலர் கதறி அழுததோடு அதிர்ச்சி தாங்காமல் உயிரிழப்பதும் தொடர்கதையாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரையிலும் மொத்தம் 470 பேர் ஜெயலலிதா மறைவை செய்தி தாங்க முடியாமல் உயிரிழந்துள்ளதாக, அதிமுக தலைமைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. .
உயிரிழந்த 470 பேரின் குடும்பத்தினருக்கு, தலா ரூ.3 லட்சம் வீதம் இழப்பீடு வழங்குவதாகவும் அதிமுக தலைமைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.