கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதியான இதேநாளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வருடம் செப்டம்பர், 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் தொடர்ந்து சுமார் 75 மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி இரவு உயிரிலாந்தார். 


இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. முதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. சென்னை அண்ணா சாலையில் இருந்து மவுன ஊர்வலம் தொடங்கியது. இதில் ஓபிஎஸ். ஈபிஎஸ், அமைச்சர்கள் அனைவருமே கருப்புசட்டை அணிந்திருந்தனர். 


பின்னர் ஜெயலலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.