ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்
கடந்த மாதம் செப்டம்பர் 22-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார்.
அவரது உடல்நிலை குறித்து அப்பல்லோ அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன ஆனால் கடந்த 10 நாட்களாக அறிக்கைகள் வெளியிடப்படவில்லை. தற்போது ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்படுவதாகவும், அவரது உடல் நலம் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது:- முதல்-அமைச்சர் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள், சுவாச உதவி, பிசியோதெரபி ஆகியவை டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு மூத்த இருதய நோய் நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், தொற்றுநோய்த் துறையைச் சேர்ந்த நிபுணர்கள், நீரிழிவு நோய் நிபுணர்கள் ஆகியோர் சிகிச்சையளித்து வருவதாகவும், மேலும் வருக்கு அளிக்கப்படும் ஊட்டச்சத்தை மற்றும் அத்தியாவசிய சத்துக்களை நிபுணர்கள் கண்காணித்து வருவதாகவும் அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ சேவை பிரிவு இயக்குனர் என். சத்தியபாமா கூறியிருக்கிறார்.
முதல்-அமைச்சர் நன்றாக பேசுகிறார். அவரது உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த பத்து நாட்களில் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து வெளிவரும் முதல் அறிக்கை இதுவாகும்.