ஹிலாரி கிளிண்டன் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதாவே காரணம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட முதல்-அமைச்சர் ஜெயலலிதாவே காரணம் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கூறி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பேசிய குன்னூர் அதிமுக எம்.எல்.ஏ. ராமு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது ஜெயலலிதாவை ஹிலாரி சந்தித்ததின் எதிரொலியாகவே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். ஜெயலலிதா - ஹிலாரி சந்திப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக உலகம் புகழ்கிறது. இருவர் சந்திப்பின் போது முதல்-அமைச்சரின் உறுதியான வார்த்தையில் உள்ள யதார்த்தத்தை ஏற்று ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார் என இவ்வாறு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ. ராமுவின் இப்பேச்சு பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள லாரி கிளிண்டனுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.