கவர்னரை வரவேற்றார் முதல்-அமைச்சர் ஜெயலலிதா
தமிழக கவர்னராக இருந்த ரோசைய்யாவின் பதவி காலம் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. அவருக்கு பதில் புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரை மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.
இதையடுத்து மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவரை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் கவர்னரை வீரர்கள் அணிவகுப்புடன் கிண்டியில் உள்ள மாளிகைக்கு அழைத்து வந்தனர். இன்று மாலை கவர்னர் மாளிகை தர்பார் ஹாலில் வித்யாசாகர் ராவ் தமிழக கவர்னராக பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வித்யாசாகர் ராவுக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.