தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடரந்து கண்காணித்து வருகின்றனர். 


ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.  
இதனிடையே, அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் திரண்டனர்.


ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக அமைச்சர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்துள்ளனர். 


முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் தமிழகம் முழுவதும் நடக்க அதிமுக நிர்வாகிகளால் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


முதல் அமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய பிரதமர் நரேந்திர மோடி பூங்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பிவைத்து உள்ளார். அந்த கடிதத்துக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்து உள்ளார்.


 



 



 



 


தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் ஜெயலலிதா குணமடைய வாழ்த்து தெரிவித்து உள்ளார் அதில் மக்களின் பிரார்த்தனை முதல் அமைச்சரை எப்போதும் நலமுடன் வாழவைக்கும். விரைவில் குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என கூறியுள்ளார்.


மேலும் கர்நாடக மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.