சசிகலா முதல்வராக வர அனுமதிக்க மாட்டேன் என ஜெ., உறுதியளித்தார்- மனோஜ் பாண்டியன்
சென்னை அண்ணாநகர் இல்லத்தில் முன்னாள் சபாநாயகரும், அதிமுக-வின் மூத்த தலைவருமான பி.எச் பாண்டியன் மற்றும் மனோஜ் பாண்டியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
சென்னை: சென்னை அண்ணாநகர் இல்லத்தில் முன்னாள் சபாநாயகரும், அதிமுக-வின் மூத்த தலைவருமான பி.எச் பாண்டியன் மற்றும் மனோஜ் பாண்டியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதிமுக மூத்த தலைவர் மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-
சேரன்மகா தேவி சட்டமன்ற உறுப்பினராகவும், ராஜசபா எம்.பி.யாகவும் என்னை அமர வைத்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றிகடன் பட்டுள்ளேன். சசிகலா அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என்ற நிலையில் 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக தலைமை செயலகத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசினார், அதனை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். என்னிடம் பேசிய ஜெயலலிதா பெரும் கூட்டம் எனுக்கு எதிராக சதிசெய்கிறது என்னை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முயற்சி செய்கிறார்கள் என்றார்.
இதனையடுத்து சசிகலா குடும்பத்தினரை வெளியேற்றினார். அதற்கு பின்னர் முக்கியமான பணிகளை எங்களிடம் வழங்கினார் அவர்களுக்கு நாங்கள் ஆலோசனை வழங்கினோம்.
இந்நிலையில்தான் மார்ச் மாதம் மன்னிப்பு கோரி சசிகலா மீண்டும் போயஸ் கார்டன் வந்தார். அப்போது நாங்கள் வருத்தம் அடைந்தோம் அப்போது ஜெயலலிதா எங்களில் 5 பேரை மாடிக்கு அழைத்தார். ஒவ்வொருவரையாக பார்த்த போது, சசிகலா குடும்பத்தினரை அரசியலில் ஈடுபடுத்த மாட்டேன் என்று உறுதியளித்தார்.
விஷம் கொடுத்து கொன்றுவிடுவார்களோ என என்னிடம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார் என்றும் மனோஜ் பாண்டியன் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கட்சியின் விதிகள் மாற்றப்பட்டது கிடையாது. கட்சியின் பொதுச்செயலாளரை கட்சியின் தொண்டர்கள்தான் தேர்வு செய்யவேண்டும் என்று மனோஜ் பாண்டியன் கூறியுள்ளார்.