மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதா கர்ப்பமாக இல்லை என்பதை வீடியோ ஆதாரத்துடன் நிரூபித்த தமிழக அரசு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள் தான் தான் என்று கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா (வயது 38) என்ற பெண் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் முன்னதாக மனு தாக்கல் செய்திருந்தார். 


அந்த மனுவில் அவர் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்றும், கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி 1980 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு பிறந்ததாகவும் கூறியிருந்தார். தன்னுடைய வளர்ப்பு தாய் சைலஜா 2015 ஆம் ஆண்டு இறந்துவிட்டதாகவும், வளர்ப்பு தந்தை சாரதி அதே ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி  இறந்துவிட்டதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். 


தாம் தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிருபிக்க அவரது அவரது உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவையே புரட்டிப்போடு சர்ச்சையை ஏற்படுத்தியது. 


இந்த மனு குறித்து பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது நீதிமன்றம். இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதா கர்ப்பமாக இல்லை என்பதை வீடியோ மூலம் நிரூபித்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில், தமிழ்நாடு வழக்கறிஞர் ஜெனரல் விஜய் நாராயண் கடந்த 1980 ஆம் ஆண்டு நடந்த பிலிம்ஃபேர் விருது விழாவில் ஜெயலலிதா கலந்து கொண்ட பழைய வீடியோ ஒன்றை ஆதாரமாக சமர்பித்துள்ளார். நீதிபதி வைத்தியநாதனுக்கு முன்னாள் முதல்வர் கிருஷ்ணகிரி அம்ருதா சரதீ பிறந்தார் என்று கூறும் போது, அவர் "கர்ப்பம் தரிக்கவில்லை என ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளார் வழக்கறிஞர் ஜெனரல் விஜய் நாராயண். 


அம்ருதா பிறந்த ஆண்டான 1980 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிலிம்ஃபேர் விருது விழாவில் முன்னாள் முதலவர் ஜெயலலிதா கலந்துகொண்ட வீடியோ-வை கண்டறிந்துள்ளனர். இந்த வீடியோ அம்ருதா பிறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் படம்பிடிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த வீடியோவில் ஜெயலலிதா கற்பமாக இருப்பது தெரியவில்லை. இதையடுத்து அரசாங்க தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் இருந்து மேலும் வீடியோ காட்சிகளை ஆதாரமாக காட்டியுள்ளனர். 



இருந்தாலும், இந்த வீடியோவை நம்புவதற்கு சிலர் தயாராக இல்லை. இந்த வீடியோ ஒரு வேலை அம்ருதா பிறந்ததற்கு பின்னர் எடுக்கபட்டிருந்தால் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.