ஜெயேந்திரர் வாழ்க்கை வரலாறு! பிளாஷ்பேக் ஒரு பார்வை!
காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் இன்று சித்தியடைந்தார்.
காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் இன்று சித்தியடைந்தார்.
ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜூலை 18, 1935- பிப்ரவரி 28, 2018, சுப்ரமண்யம் மகாதேவ ஐயர் 69 வது சங்காரச்சார்யர் (குரு) இந்து சமயத்தின் காஞ்சி காமகோடி பீடாதிபதி.
சுப்ரமண்யம் மகாதேவ ஐயர் முன்னாள் பீடாதிபதியான ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி இளைய பீடாதிபதியாக மார்ச் 22, 1954-ம் ஆண்டில் அறிமுகம் செய்து வைத்தார்.
இவரின் புரோகிதத்தன்மையாலும் ஆழ்ந்த புலமையாலும் இந்து சமயத்தினரிடையே செல்வக்குடையவராகத் திகழ்கிறார். காஞ்சி மடத்தின் அதிகாரம் பெற்றத் தலைவராக விளங்குகிறார். இம்மடத்தில் பல வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் காஞ்சி மடத்தின் ஆதரவாளர்களாக உள்ளனர்.
இம்மடம் பல பள்ளிகளையும், மருத்துவமனைகளையும், சென்னையில் இயங்கும் சங்கர நேத்ராலயா மற்றும் கவுகாத்தி, அசாம், மற்றும் இந்து மிசன் மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவமனை மற்றும் தமிழுநாடு மருத்துவமனை போன்றவைகளை இயக்குகின்றன.
இளையமடாதிபதியாக இருந்த கால கட்டத்தில் திடீரென காஞ்சி மடத்தை விட்டு வெளியேறி தலைமறைவானார். அப்போது மூத்த அரசியல் தலைவர்கள் தலையிட்டு ஜெயேந்திரரை கண்டுபிடித்து மீட்டு வந்தனர். நவம்பர் 11, 2004, அன்று காஞ்சி கோவில் மேலாளர் சங்கர்ராமன் கொலை வழக்கில் ஜெயந்திர சரஸ்வதி கொலைக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜனவரி 10, 2005 அன்று உச்சநீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் உச்சநீதிமன்றம் இவர் மீதுள்ள குற்றவழக்குகளை தமிழக உயர்நீதிமன்றத்திலிருந்து புதுவை நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டு அதன்படி இவ்வழக்கு புதுவையில் விசாரிக்கப்பட்டு வந்தது.
நவம்பர் 27 2013, அன்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து ஜெயந்திர சரஸ்வதி விடுதலை செய்யப்பட்டார். ஜெயேந்திரர் தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை மார்ச் 2011-ம் ஆண்டு தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயேந்திரர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அன்று காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் காஞ்சி சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அன்றைய தினமே காலமானார்.