காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் இன்று சித்தியடைந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார் ஜெயேந்திரர். கடந்த மூன்று மாதங்களாகவே உடல் நல குறைவுடன் காணப்பட்டு வந்துள்ளார் ஜெயேந்திரர்.


காஞ்சி மடத்தின் 69வது சங்கராச்சாரியாராக இருந்தவர் ஜெயந்திரர். இவருக்கு வயது 82. இவருடைய இறப்பை அறிந்த பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


அவரது உடல் தனியார் மருத்துவமனையில் இருந்து காஞ்சி சங்கரமடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவை தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் நடை சாத்தப்பட்டது. மேலும் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உடல் காஞ்சி மடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.