சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எம்.துரைசாமி பதவி வகித்து வந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக பணியாற்றிய முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற (Chennai High Court) பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு தமிழக ஆர்.என் ரவி இன்று காலை பதவி பிரமாணம் செய்து வைத்தார். 


தொடர்ந்து அவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் சென்னை நீதிமன்ற நீதிபதிகள், ஆன்லைன் வாயிலாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள், பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களின் பிரதிநிதிகள், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட வழக்கறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.


ALSO READ | மழை பாதித்த பகுதிகளை இன்று ஆய்வு செய்கிறது மத்திய குழு


தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ் அமல்ராஜ், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் உள்ளிட்டோர் பொறுப்பு தலைமை நீதிபதியை வரவேற்று பேசினர்.


தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய  நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நேற்று முதல் தமிழ் கற்க தொடங்கியுள்ளதாகவும்,
தற்போதைக்கு "வணக்கம்" "நன்றி" என்ற இரண்டு வார்த்தையை தெரிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். அலகாபாத் உயர்நீதிமன்றத்தை தொடர்ந்து பாரம்பரியமிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஆன்மீகத்திற்கும் கோயில்களுக்கும் பெயர் பெற்றது  தமிழ்நாடு எனவும், கலாச்சார ரீதியாகவயம் வரலாறு ரீதியாகவும் தமிழ்நாடு மேன்மையானது எனவும் தெரிவித்தார்.


தமிழ்நாடு மீது காதல் கொண்டுள்ளதாகவும், தமிழகத்தில் பிறந்திருக்க வேண்டும் என முன்பு கண்ட  கனவு தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதன் மூலம் நனவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.


வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் ரதத்தின் இரு சக்கரங்கள் நீதி பரிபாலனத்திற்கு இரண்டு சக்கரங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்த அவர் என் பணியில் பயமோ பாரபட்சமோ இருக்காது என உறுதிபட தெரிவித்தார். பேச்சை விட செயலில் காட்ட விரும்புவதாகத் தெரிவித்த நீதிபதி அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என கூறி நன்றி தெரிவித்தார்.


ALSO READ | திருச்சி உதவி ஆய்வாளர் பணியின்போது வெட்டிப்படுகொலை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR