காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காஞ்சி புட்இ என்ற புதிய பிரியாணி கடையின் திறப்பு விழாவை முன்னிட்டு இன்று வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க கடையின் உரிமையாளர் 5 பைசாவுக்கு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படுவதாக அறிவிப்பு செய்தார். இதையடுத்து 5 பைசா நாணயத்துடன் ஏராளமானோர் பிரியாணி வாங்க திரண்டதால் அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யாரிடம் 5 பைசா இருக்கும் என நினைத்துக் கொண்டு இந்த ஆஃப்பரை அறிமுக செய்த புதிய பிரியாணி கடையில் இவ்வளவு பேர் வந்தது ஆச்சரியத்தை அளித்துள்ளது. 


இது குறித்து பிரியாணி கடை உரிமையாளர் தெரிவிக்கையில், புதிய பிரியாணி கடை மீது வாடிக்கையாளர்களின் கவனம் திரும்ப வேண்டும் என்பதற்காகவும், அதே சமயத்தில் செல்லாத நாணயத்தை கூட சேமித்து வைத்தால் பெருமையை தரும் என்பதை உணர்த்தும் வகையில் 5 பைசா நாணயத்தை கொண்டு வந்து கொடுத்தால் பிரியாணி தரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டோம் என்று கூறினார். எல்லார் கையிலும் 5 பைசாவை பார்க்கும்போது ஆச்சரியமாகவும் இருந்தது என்றும் கூறினார்.



இதற்காக பிற்பகல் 12 மணியளவில் பிரியாணி தயார் செய்து விற்பனை துவங்க உள்ள நிலையில் 10 மணி முதலே பொதுமக்கள் ஐந்து பைசா நாணயத்தை கையில் வைத்துக் கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து செல்லாதா ஐந்து பைசாவை கொடுத்து பிரியாணியை பெற்றுச்சென்றனர்.



முதல் 50 பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்க முடிவு செய்த நிலையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் முதல் 100 பேருக்கு ஐந்து பைசா பெற்றுக்கொண்டு பிரியாணி அளித்தும், ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் ரைஸ் இலவசம் என்ற  விற்பனையும்  ஜோராக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.


மேலும் படிக்க | காஞ்சிபுரம் அருகே 1200ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்த தேவி சிலை கண்டுபிடிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR