பொருளாதார உரிமையும் பெண்களின் விடுதலையும்-கலைஞர் மகளிர் உரிமைத்தொகை செய்த மாற்றம்!
Magalir Urimai Thittam: Economic Rights and Women`s Liberation:‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
செப்டம்பர் 15ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு தகுதியின் அடிப்படையில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது நடைமுறைக்கு வந்துள்ளது. முதலில் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் 1 ரூபாய் அனுப்பப்பட்டது. இதையடுத்து மகளிருக்கு 1,000 ரூபாய் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் அனைவரது வங்கி கணக்கிலும் பணம் செலுத்த முடியாது என்பதால் முன்கூட்டியே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கூட்ட நெரிசலை தவிர்க்க இதற்காக சிறப்பு முகாம்களும் அமைக்கட்டிருந்தது. இந்த திட்டத்திற்காக தமிழக பட்ஜெட்டில் இருந்து வருடத்திற்கு சுமார் 12ஆயிரம் கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிய திட்டம்…!
வருமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மகளிருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தால் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பயணடைவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை பொருத்தவரை வருமைக்கோட்டிற்கு கீழுள்ள பெண்கள் பலர் தினசரி கூலி வேலைக்கு சென்று தங்களது செலவுகளை சரிகட்டி வருகின்றனர். தற்போது தமிழக அரசின் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தால், மாதத்தின் இறுதி நாட்களில் செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனதாக பெண்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | ஹிஜாப் அணிந்து விளையாடிய மாணவிகளை அடித்த ஆசிரியை!
தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக, குடும்ப தலைவிகள் பலர், சிறு சிறு செலவுகளை தங்களால் தனியாகவே இப்போது சமாளிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்போது அமலில் இருக்கும் மகளிருக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் திட்டத்தினால் இல்லதரசிகள் பலர் தங்களுக்கு 25 சதவிகிதம் செலவுகள் குறைந்து விட்டதாக முன்னர் ஒரு கருத்து கணிப்பில் கூறியிருந்தனர். அதனுடன் சேர்த்து தற்போது செயல்படுத்தப்பட்டிருக்கும் மகளிர் உரிமை தொகை திட்டமும் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மருந்து வாங்க உதவும்…
மகளிர் பலர், தாங்கள் வீட்டு வேலைக்கு செல்வதாகவும் உரிமைத்தொகை மூலம் கிடைத்த 1,000 ரூபாய் தங்களுக்கு மருந்து, மாத்திரைகள் வாங்க உதவும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக அரசால் இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படும் இந்த 1,000 ரூபாய் செலவு செய்யப்படவில்லை என்றாலும், சேமிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.
ஏழை மக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்
கிராமப்புற ஏழை எளிய பெண்கள், ஆதரவற்ற பெண்கள் என அவர்களுக்கு ஒரு தொகையை மாதம் தோறும் தர வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு இது பெரிய உதவியா இருக்கும் என்றும் பலர் சொல்கிறார்கள்.
திமுக அரசின் சாதனை
ஆயிரம் ரூபாய் வைத்து பெருசா என்ன சாதிக்க முடியும்? என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்.. அந்த ஆயிரம் ரூபாய் கூட இல்லாதவரிடம் போய் அதைக் கேளுங்க" உண்மை தெரியும், திமுக அரசின் சாதனையும் தெரியும் என கூறினார்கள் பெண்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ