Reason Behind Kamal Haasan Effigy Burnt: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் தயாரிப்பில் அக்.31ஆம் தேதி தீபாவளி அன்று வெளியான திரைப்படம் 'அமரன்'. இத்திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு பலியான தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை பதிவு செய்யும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உயிர் தியாகம் செய்த ராணுவ அதிகாரியின் வாழ்க்கை வரலாறு என்பதால் இத்திரைப்படத்திற்கு தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் ரூ.69 கோடிக்கு வசூல் செய்திருப்பதாகவும், உலக முழுவதும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் கூறப்படுகிறது. இருப்பினும், இத்திரைப்படத்திற்கு சில தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பும் கிளம்பியிருப்பது குறிப்படத்தக்கது எனலாம். அதுவும் அமரன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சி தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகிறது.  


இந்நிலையில், அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி எஸ்பிடிஐ கட்சி சார்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை விதைத்து நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில், அமரன் திரைப்படம் இருப்பதாகவும் தெரிவித்து மாநில செயலாளர் ஏ.கே. கரீம் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மேலும் படிக்க | 70 வயதாகும் கமலிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 7 பாடங்கள்!!


அமரன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு


சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 100 பேர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனை கண்டித்தும் பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென நடிகர் கமலஹாசனின் கொடும்பாவியை எரித்தும், செருப்பால் அடித்தும், அவரது படத்தை கிழித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


'இஸ்லாமிய வெறுப்பை விதைக்கிறது'


பின்னர் பேட்டி அளித்த மாநில செயலாளர் கரீம், "இஸ்லாமிய வெறுப்பை இந்த படம் முழுவதுமாக காட்டுகிறது. தமிழக அரசு இந்த படத்தை தடை செய்யக்கோரி கேட்கிறோம். 'ஆசாதி' என்று சுதந்திரத்திற்கு பிறகு எழுப்பப்படுகிற முழக்கத்தை பயங்கரவாதம் போல சித்தரிக்கின்றனர். இஸ்லாமிய சிறுவர்களை தீவிரவாதப்படுத்துதல் இஸ்லாமியர்களிடம் துப்பாக்கி குண்டுகளை கொடுப்பது போல் காட்டப்பட்டுள்ளது. 


இந்தியாவில் வாழக்கூடிய ஒவ்வொரு இஸ்லாமியர்களும் காஷ்மீர் இந்தியாவில் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருக்கின்றனர். அமரன் திரைப்படம் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை ஏற்படுகிறது. ஆனால் ஒருவரின் வாழ்க்கை வரலாறு என கூறுகிறார்கள். தமிழ்நாடு அரசு இப்படத்தினை தடை செய்ய வேண்டும்" என்றார். மேலும் சென்னையில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று அமரன் திரைப்படத்திற்கும், அதன் தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பும் தெரிவித்தும் எஸ்பிடிஐ தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 


கமல்ஹாசனின் 70ஆவது பிறந்தநாள்


முன்னதாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று அவரது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 


மேலும் படிக்க | கமல்ஹாசன் பரிந்துரைக்கும் 7 அற்புத புத்தகங்கள்! கண்டிப்பா படிங்க...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ