2019 மக்களவை தேர்தல்: மம்தா பானர்ஜியுடன் கூட்டணி அமைத்த கமல்ஹாசன்
வரும் மக்களவை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் (TMC) கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என அறிவித்த கமல்ஹாசன்.
தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெறவுள்ள 40 தொகுதிக்களுக்கான மக்களவை தேர்தலிலும், தமிழகத்தின் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகின்றது. அதற்க்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன். மேலும் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். ஆனால் மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று கமல்ஹாசன் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜியை கொல்கத்தாவில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளா்களிடம் பேசிய கமல்ஹாசன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானா்ஜியுடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. வரும் மக்களவை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் (TMC) கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும். அந்தமானுக்கான திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி பிரச்சாரம் மேற்கொள்ளும். இந்த உறவு எதிர்காலத்தில் நன்றாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என கமல்ஹாசன் தெரிவித்தார்.