மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் “பெயராக”, “மதமாகக்” கொள்வது எத்தகைய அறியாமை... என இந்து மதத்தினை குறித்து மீண்டும் சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார் கமல் ஹாசன்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று நிறைவு பெற்றுள்ள நிலையில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் தனது முகப்புத்தகத்தில் இட்டுள்ள பதிவு தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையினை கிளப்பியுள்ளது. முன்னதாக சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை சுட்டிக்காட்டி அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசார களத்தில் கமல் பேசினார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.


இந்நிலையில் தற்போது மீண்டும் மாற்றான் கொடுத்த இந்து என்னும் பட்டத்தை நாம் வைத்துக்கொண்டு சர்ச்சை உண்டாக்குவது அர்த்தமற்றது என தெரிவித்து மற்றுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளதாவது...



"சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய / மாநில அரசுகள்.


மக்கள் எடுத்து விட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது.


12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ, “இந்து” என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ “இந்து” என நாமகரணம் செய்யப்பட்டோம்.


ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர்.


நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் “பெயராக”, “மதமாகக்” கொள்வது எத்தகைய அறியாமை...


நாம் “இந்தியர்” என்கின்ற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது.


நாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக / அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகும்.


புரியலன்ற சோமாரிகளுக்கு....


“ கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம்.


“கோடி”ன்ன உடனே “பணம்” ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி!! “தமிழா” நீ தலைவனாக வேண்டும். 
இதுவே என் வேண்டுகோள்!" என குறிப்பிட்டுள்ளார்.