உடல் உறுப்புகளை தானம் செய்தும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமலஹாசனின் பிறந்த நாளான இன்று (7 ஆம் தேதி)  உடல் தானத்தை வலியுறுத்தும் வகையில், அவருடைய குரலில் பதிவு செய்த வீடியோ ஒன்றை அவருடைய கட்சியினர் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். 


தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன். ஏற்கெனவே 2002 ஆம் ஆண்டில் ஆகஸ்டு 15 ஆம் தேதி சென்னை மருத்துவக்கல்லூரியில் இறந்தபிறகு தன் உடலை தானம் செய்வதாக பதிவு செய்திருக்கிறார். அவருடைய மகள்கள் உட்பட குடும்பத்தினரும் பதிவு செய்திருக்கிறார்கள். ரத்த தானம் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்குவது மற்றும் பல்வேறு நற்பணிகளில் மன்றத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்த ஆண்டு தன் பிறந்த நாளை முன்னிட்டு உறுப்புதானம், ரத்த தானம், மருத்துவ முகாம்கள், உள்ளிட்ட பணிகளைச் செய்ய வேண்டும் என்று அறிக்கை மூலம் வலியுறுத்திருந்தார். இந்த நிலையில், அவர் உடல்தானத்தை வலியுறுத்தும் வகையில், ``தாயாய் மாற அழகு குறிப்பு..." என்ற தலைப்பில், அவருடைய குரலில் பதிவு செய்த வீடியோ ஒன்றை அவருடைய கட்சியினர் பகிர்ந்து வருகிறார்கள்.