நடிகர் கமல் அவர்களின் புதிய கட்சி குறித்த அறிவிப்புக்கு பிறகு, தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இன்று நெல்லை மாவட்ட ரஜினி மன்ற ரசிகர்களை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்...


"வரும் ஏப்ரல் 27 அன்று வெளியாகவுள்ள காலா திரைப்படம் ஆனது நெல்லை மாவட்ட கதைதான், நெல்லை மக்கள் மற்றவர்களுக்கு அரசியல் கற்று தருபவர்கள்.


ஒரு குடும்பத்திற்கு தலைவன் சரியாக இருக்க வேண்டும்; நம் குடும்பத்தை பொருத்தவரை நான் சரியாக இருக்கின்றேன். மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்; நாம் நமது வேலையை பார்ப்போம்.


அரசியலில் கட்டமைப்புதான் முக்கியம். அதன் அடித்தளத்தை வலிமையுடன் அமைக்க வேண்டும் எனபதால் தான் நாம் இவ்வாறு செயல்படுகிறோம்." என தெரிவித்துள்ளார்...


மேலும்., நிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்...


"கமலின் முதல் அரசியல் பொதுக்கூட்டம் நன்றாகவே அமைந்தது, அவர் திறமைசாலி, சமூக ஆர்வலர் என்பதால் அவர் தமிழகத்தை நன்றாகவே வழிநடத்துவார். அவரின் "மக்கள் நீதி மய்யம்" நன்றாகச் செயல்படும் என நம்புகிறேன்.


அரசியலில் எங்கள் இருவரது நோக்கமும் ஒன்றுதான், ஆனால் எங்கள் பாதை தான் வேறு" என தெரிவித்துள்ளார்.


முன்னதாக, நடிகர் கமல் அவர்கள் தெரிவிக்கையில் "தனக்கும் ரஜினிக்கும் நோக்கம் என்பது அரசியலில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான்.  நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள். ஆனால் அரசியல் களம் என்பது வேறு. அரசியலில் வித்தியாசப்பட்டு இருக்கவே விரும்புகிறேன்" என தெரிவித்தது அனைவரும் அறிந்ததே!


இருவரும் நீண்ட கால நண்பர்கள், ஒருமித்த அரசியல் நோக்கம் கொண்டவர்கள், எனினும் வேறு பாதையில் பயணிக்க தயராக உள்ளவர்கள் என இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த முடிவை மாற்றி இருவரும் ஒன்றினைந்து செயல்படவேண்டும் என பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவத்து வருகின்றனர்.


இந்த கருத்துகளை ஏற்று இருவரும் இணைய வாய்ப்பு இருக்கிறதா, இல்லையா என்பது காலம் தான் முடிவெடுக்கம். ஆனால் இந்த காலம் எப்போது எவ்வாறு மாறும் என்பதை யாராலும் தற்போதைக்கு கணிக்க முடியாது என்பது தான் எதார்த்தம்.