நடிகர் கமல்ஹாசன் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் இன்று நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிமுகம் செய்ய உள்ளார். கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன் தனது நண்பர்கள் மற்றும் மூத்த அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.


இன்று தனது அரசியல் பயணத்தினை ராமேஸ்வரம் அப்துல் கலாம் ஐயா அவர்களின் வீட்டில் இருந்து துவங்கவுள்ளார் நடிகர் கமலஹாசன். இந்த பயணத்தின் போது அப்துல் கலாம் ஐயா அவர்கள் படித்த பள்ளிக்கு செல்லவுள்ளதாகவும் அவரது பயண விவரம் தெரிவிக்கின்றது.


இந்நிலையில் கலாம் அவர்கள் படித்த பள்ளியின் மீது அரசியல் சாயம் பூசவேண்டாம் என கோரி, ராமேஸ்வரம் மாநிலம் இந்து முன்னணி மாநில தலைவர் ரமேஸ்வரம் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். முன்னதாக, தனது அரசியல் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து தமிழக தலைவர்கள் பலரையும் சந்தித்து வருகின்றார்.


இதையடுத்து, கலாம் அவர்கள் படித்த பள்ளிக்கு செல்லும் திட்டத்தை ரத்து செய்துள்ளார் நடிகர் கமல். 


இன்று நடைப்பெறவுள்ள மதுரை மாநாட்டில் கமல் தனது அரசியல் கட்சி பெயரையும், கொடியையும் தெரியப்படுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!