காஞ்சிபுரம் சங்கரமடம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை மரணம் அடைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர்டைய மறைவிற்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வரராஜ், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, .எஸ்.வி.சேகர், மதுரை ஆதீனம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


காஞ்சி மடத்தின் 69வது சங்கராச்சாரியாராக இருந்தவர் ஜெயந்திரர். இவருக்கு வயது  82. இவருடைய இறப்பை அறிந்த பக்தர்கள், மற்றும் பொதுமக்கள்  அதிருப்தி  அடைந்துள்ளனர்.


தற்போது அவரது உடல் தனியார் மருத்துவமனையில் இருந்து காஞ்சி சங்கரமடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவை தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் நடை சாத்தப்பட்டது.


அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாக, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை: சமூக சிந்தனையுடன் கூடிய ஆன்மீகவாதி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரை பாரதம் இழந்திருக்கிறது என்றார்.


எஸ்.வி.சேகர், காஞ்சி பெரியவர் ஶ்ரீ ஜெயேந்திரர் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சி; ஈடு செய்ய முடியாத இழப்பு என்றார். 


மதுரை ஆதீனம் கூறுகையில்;- காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவு செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். குமரி மாவட்டத்தில் மதப் பிரச்னை எழுந்த போது சமாதானம் செய்தவர் ஜெயேந்திரர். 


துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், காஞ்சி மடத்தின் படாதிபதி திரு.ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி அவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்றார்.