இஸ்லாமிய மதத்தில் திருமணம் ஆன ஆண் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு முத்தலாக் முறையை பின்பற்றுவர். இதுகுறித்து இஸ்லாமிய பெண்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து பாராளுமன்றத்தில் கடந்த டிசம்பர் 28 முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் இதை தாக்கல் செய்தார்.


பாராளுமன்றத்தில் இந்த முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க- காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். எனினும் மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதால் கடும் எதிர்ப்புகளுக்கு நடுவே மசோதா நிறைவேற்றப்பட்டது.


இதையடுத்து, இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் கொண்டு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுகுறித்து திமுக மாநிலங்களவை எம்.பி கனிமொழி கூறியதாவது:


"மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடை சட்ட மசோதாவில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதனை நாடாளுமன்றத்தில் அவசர கதியில் நிறைவேற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து தரப்பினரின் கருத்தை கேட்ட பிறகே இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கப்பட வேண்டும். இதனை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்" எனக்கூறினார்.