கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று கர்நாடகா முதலவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல ஆண்டுகளாக தமிழகம் மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர் விவரகாரத்தில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் 1892-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை தீர்வு காணமல் வருகிறது. 


சமீபத்தில் உச்சநீதிமன்றம் காவிரி நீர் எந்த ஒரு மாநிலத்துக்கும் சொந்தமில்லை என்றும் தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டதுடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரிக்கை தமிழகத்தில் எழுந்தது. பல்வேறு போராட்டம் நடத்தப்பட்டும் கர்நாடகா காவிரி நீரை திறந்துவிடாமல் பிடிவாதமாக இருந்து வந்தது


தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கர்நாடகத்தில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் கபினி உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன. கபினி அணையின் மொத்த நீர்மட்டம் 84 அடியில் 80 அடியை தண்ணீர் எட்டியுள்ளது.


இதையடுத்து கபினி அணையில் இருந்து தண்ணீர் உடைத்து கொண்டு வெளியேறினால் கர்நாடக அரசு நீரை திறந்துவிட்டது. இந்நிலையில் நேற்று வரை கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 15,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை முதல் விநாடிக்கு 35,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 


இதையடுத்து, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியதாவது...! 


தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளது. கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருவதால் இந்த முறை தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் பிரச்னை இருக்காது. கடவுளின் அருளால் கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருவதால் இந்த முறை தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் பிரச்னை இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்!