புது டெல்லி: இன்று (செவ்வாய்க்கிழமை) மக்களவையில் நடந்த கூட்டத்தில், முன்னால் நிதியமைச்சரின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கார்த்திக் சிதம்பரம் (Karthi Chidambaram), மோடி அரசாங்கத்தை பாராட்டி பேசியுள்ளார். நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தும் வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்களை மேற்கொண்டு வருகிறது. மேலும் அனைத்து மாநில அரசுகளும் பல உத்தரவுகளை பிறப்பித்து, கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு (Corona virus in india) குறைவாக இருப்பதால், ஒருபக்கம் நிம்மதியாக இருந்தாலும், மறுபக்கம் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுவரை நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.


இந்த நடவடிக்களை குறித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம், கொரோனா வைரஸ் தொற்றுவதைத் தடுக்க மத்திய அரசு மேகொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டுகிறேன். மேலும் அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு அனைத்து கட்சியின் உறுப்பினர்கலும் ஆதரிக்கவும் வலியுறுத்தினார். அதாவது அவர், கொரோனா வைரஸ் தொற்றுவதைத் தடுக்க அரசாங்கம் பாராட்டத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்றும், இது தொடர்பாக அனைவரும் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் கூறினார். 


கொரோனா வைரஸ் அச்சத்தை அடுத்து பாராளுமன்ற நடவடிக்கைகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுமா? என்ற கேள்விக்கு நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹ்லதா ஜோஷி, கொரோனாவுக்கு பயந்து பாராளுமன்றம் மூடப்படாது மற்றும் திட்டமிட்டப்படியே பாராளுமன்றம் ஏப்ரல் 3 வரை இயங்கும் எனவும் கூறினார்.