சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற்று டிவி பார்க்கும் புகைப்படத்தை காவேரி மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


திமுக தலைவர் கருணாநிதி தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் கடந்த 15-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். டாக்டர்கள் தொடர் சிகிச்சையால் அவர் உடல்நலம் தேறிவிட்டார். இன்னும் ஒரு சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டு உள்ளது.


இந்நிலையில் உடல்நலம் பெற்று நாற்காலியில் அமர்ந்து டிவி பார்க்கும் புகைப்படம் ஒன்றை காவேரி மருத்துவமனை வெளியிட்டு உள்ளது. மேலும் விரைவில் கருணாநிதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.