தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க அதிரடி சலுகைத் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தார். 50 பைசாவிற்கு டி-ஷர்ட்களை விற்பதாக  போஸ்டர் ஒட்டினார். 50 காசுகளுக்கு கறிவேப்பிலைக் கூட வாங்க முடியாது என்னும் போது டி-ஷர்ச் கிடைத்தால் மக்கள் சும்மா இருப்பார்களா?\


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அலை அலையாய் மக்கள் கூட்டம் கடையை முற்றுகையிட்டனர். கடைக்காரருக்கு விற்பனையும் நடந்தது. பெயரும் கிடைத்தது. ஆனால், கட்டுப்படுத்த முடியாத அளவு கூட்டம் கூடியதும், போலீசார் கடைக்கு மூடுவிழா நடத்திவிட்டனர்.


இந்த வைரல் சம்பவம் நடைபெற்றது எங்கு தெரியுமா?  திருச்சி மணப்பாறையில் கடை வைத்திருக்கும் ஹக்கீம் முகமது தான் இந்த சலுகை விலை திட்டத்தை அறிவித்தார். வியாழக்கிழமை காலை அவர் தனது கடையை திறந்ததுமே, மக்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு டி-ஷர்ட் வாங்க குவிந்தனர்.


50 பைசாவுக்கு ஆடை என்ற விளம்பரம் உள்ளூர் வாட்ஸ்அப் குழுக்களிலும் வைரலாகப் பரவியது.  வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 50 காசுக்கு ஒரு டி-ஷர்ட் என்ற விற்பனை சலுகைத் திட்டம் பொது மக்களை கவர்ந்தது. காலை முதலே, மாபெரும் கூட்டம் கூடி அந்த சாலையில் போக்குவரத்தையே ஸ்தம்பித்துப் போனது.


Also Read | பண்டிகை கால ஷாப்பிங்கில் இனி டென்ஷன் வேண்டாம்


கடையின் கவுண்டரில் 50 பைசாவை செலுத்திவிட்டு, முதல் மாடிக்கு சென்றால், அங்கு டி-ஷர்ட் வாங்கிக் கொள்ளலாம். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகமாகிக் கொண்டே சென்றதால், சாலையைத் தடுத்து வைத்த போலீசார், கடையை மூடுமாறு உரிமையாளரை கட்டாயப்படுத்தினர்.


1,000 க்கும் மேற்பட்ட காட்டன் டி-ஷர்ட்களை விற்க முடிவு செய்திருந்த ஹக்கீம், போலீசாரின் கட்டுப்பாட்டால் கடையை மூட நேர்ந்தது. பாவம் அவரால் 100 சட்டைகளை மட்டுமே விற்க முடிந்தது. சலசலப்புக்கு பிறகு மதியம் 1 மணிக்கு பிறகு கடை மீண்டும் திறக்கப்பட்டதும் மக்கள் வரத் தொடங்கினர்.


ஆனால், கடை உரிமையாளர் அறிவித்த திறக்கப்பட்ட பிறகும், பலர் 50 பைசா நாணயங்களுடன் கடைக்கு வந்தனர், ஆனால் சலுகை காலம் முடிந்ததால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.


எது எப்படியிருந்தாலும், 50 காசுக்கு டி-ஷர்ட் விற்பனை செய்வதாக அறிவித்த கடைக்கு மணப்பாறையில் நல்ல விளம்பரம் கிடைத்துவிட்டது.


Read Also | மிகக்குறைந்த விலையில் வீடு, மனை வாங்க சூப்பர் வாய்ப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR