கோவை மாணவி தற்கொலை வழக்கு: கைதான ஆசிரியருக்கு 2 நாள் போலீஸ் காவல்
மிதுன் சக்ரவர்த்தியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீது விசாரணை நடத்திய நீதியரசர் குலசேகரன், அவரை இரண்டு நாட்கள் போலிஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி அளித்தார்.
கோவை மாணவி பாலியல் தொல்லை விவகாரத்தில் கைதான மிதுன் சக்கரவர்த்தியை இரண்டு நாட்கள் போலிஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கோவை மாணவி பாலியல் தொல்லையால் (Sexual Assault) தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் மீதும் வழக்கு பதியப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார். அவரை தனிப்படை அமைத்து தேடிவந்த போலீசார் பெங்களூருவில் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையிலடைத்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியரான மீரா ஜாக்சனுக்கு கோவை போக்சோ நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.
ALSO READ:கோவை மாணவி தற்கொலை வழக்கில் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன்
இந்நிலையில் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாட்கள் போலிஸ் (TN Police) காவலில் எடுத்து விசாரிக்க மேற்கு மகளிர் போலிசார் போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
இதனையொட்டி மிதுன் சக்கரவர்த்தி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீது விசாரணை நடத்திய நீதியரசர் குலசேகரன் 5 நாட்கள் போலீஸ் காவல் கேட்டிருந்த நிலையில் மிதுன் சக்கரவர்த்தியை இரண்டு நாட்கள் போலிஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி அளித்தார்.
மிதுன் சக்கரவர்த்தியை காவலர்கள் அழைத்து செல்லும்போது இஸ்மாயில் என்பவர் மிதுன் சக்கரவர்த்திக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ALSO READ: கோவை மாணவி தற்கொலை வழக்கில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR