கிருஷ்ணகிரி முதலீட்டு மண்டலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் EPS
கிருஷ்ணகிரி சிறப்பு முதலீட்டு மண்டலம் அமைக்கும் பணியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
கிருஷ்ணகிரி சிறப்பு முதலீட்டு மண்டலம் அமைக்கும் பணியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் சூளகிரி வட்டங்களில் டிட்கோ (ம) GMR நிறுவனங்கள் இணைந்து அமைக்கவுள்ள, GMR கிருஷ்ணகிரி சிறப்பு முதலீட்டு மண்டலத்திற்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், பாலகிருஷ்ணா ரெட்டி மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரண்டாயிரத்து 420 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உருவாகும் கிருஷ்ணகிரி சிறப்பு முதலீட்டு மண்டலம், இரண்டாயிரத்து 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது.
உலகத்தரமான நவீன அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட உள்ள இந்த சிறப்பு மண்டலத்தின் மூலம், 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வழிவகுக்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் நேரடியாக நியமனம் செய்யப்பட்ட 37 முதுநிலை அலுவலர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணிநியமன ஆணைகளை வழங்கினார்.