திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை குஷ்பு, பேப்பரில் எழுதிக் கொடுத்த தமிழையே தப்பு தப்பாக பேசும் முதலமைச்சர்,தமிழை வளர்க்கப் போவதாக சொல்வது கேலிக்குரியது என்று கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாதனை விளக்க பொதுக்கூட்டம்:


திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் எம்.ராஜசிம்ம மகேந்திரா (எ)அஸ்வின் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சி மாவட்ட பொறுப்பாளராக ஆர் கருணாகரன் மேற்பார்வையில் நடைப்பெற்றது. இதில், பொதுக்கூட்ட பொறுப்பாளராக  ஆர்யா சீனிவாசன், பொதுக்கூட்ட பொறுப்பாளராக ஆவடி  எஸ்.கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் செயல்பட்டனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மற்றும் நடிகையுமான குஷ்பூ, மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கி பேசினர்.  


மேலும் படிக்க | இனி வீதியில் நடப்பதற்கே வரி செலுத்த வேண்டுமா? இபிஎஸ் விமர்சனம்!


குஷ்பு பேச்சு..


சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில்கலந்து கொண்ட குஷ்பு, 9 ஆண்டுகளில் பாஜக செய்த சாதனைகளை விளக்கி பேசினார். அப்போது,  கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது நாள் ஒன்றுக்கு 12 கி.மீட்டர் தூரத்திற்கு தான் சாலை அமைக்கப்பட்டது என்றும் மத்திய பாஜக அரசு 30 கி.மீட்டர் தூரத்திற்கு சாலை அமைத்து சாதனை படைத்து வருகிறது என்றும் கூறினார். மேலும் நாள் ஒன்றுக்கு 60 கி.மீட்டர் தூரம் சாலை அமைக்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்திருப்பதாக தெரிவித்தார்.14 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாடு முழுவதும் 60 விமான நிலையங்கள் இருந்த நிலையில் தற்போது மேலும் 100 விமான நிலையம் ஏற்படுத்தப்பட்டு 160 விமான நிலையங்கள் செயல்படுவதாகவும் தெரிவித்தார். 


“தமிழை தப்பு தப்பாக பேசும் முதல்வர்..”


தொடர்ந்து பேசிய குஷ்பு, பேப்பரில் எழுதிக் கொடுத்த தமிழையே தப்பு தப்பாக பேசும் முதலமைச்சர்,தமிழை வளர்க்கப் போவதாக சொல்வது கேலிக்குரியது என்று கூறினார். மேலும், “தமிழை வளர்க்கின்றோம் தமிழ் தமிழ் என கூறும் திமுகவினர் சிபிஎஸ்சி பள்ளி நடத்தி அதில் ஏன் இந்தியை திணிக்கின்றீர்கள்..வெறும் தமிழ் வழிக் கல்வியை மட்டுமே நீங்கள் நடத்த வேண்டியதுதானே?” என கேள்வி எழுப்பினார். 


மோடிதான் தமிழ் கலாச்சாரம் குறித்து பேசுகிறார்..


பாஜகவின் சாதனை குறித்து பேசிய குஷ்பு, கொரோனா காலங்களில் கோவாக்சின், கோவி ஷீல்டு என 2 தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடித்து இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அதை செலுத்தியதுடன் பல்வேறு உலக நாடுகளுக்கும் சப்ளை செய்த அரசு மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தான் என்றார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும் தமிழர்களின் பெருமை கலாச்சாரம் குறித்து பேசி வருகிறார் என்றார்.  


கூட்டத்தை அடுத்த செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “பாஜகவின் சாதனைகளை சொல்லியே தேர்தலில் வெற்றி பெறுவோம் எனக்கூறினார்.  அதே போல் தமிழ்நாட்டிலும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார். 2026-ல் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கும் என கூறினார். 


மேலும் படிக்க | துணை முதலமைச்சர் ஆகிறேனா? உதயநிதி அதிரடி பேட்டி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ