Anna University Student Harassment Caseசென்னை அண்ணா பல்கலைக்கழத்தின் வளாகத்திலேயே, மாணவி ஒருவர் பாலியல் துன்புருத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ள விவகாரம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் யார் என்பது குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்ணா பல்கலை.மாணவி பாலியல் துன்புறுத்தல்!


தமிழ்நாட்டில், முதன்மை பெற்ற உயர்கல்வி நிருவனமாக விளங்கி வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். சென்னை கிண்டியில் இருக்கும் இந்த பல்கலைக்கழகத்தில் பல ஆயிரம் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு, 2ஆம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவிக்குதான் இந்த பாலியல் துன்புறுத்தல் நேர்ந்துள்ளது. 


பாதிக்கப்பட்ட மாணவி, இது குறித்து போலீஸாரிடம் புகாரளித்த போது என்ன நடந்தது என்பதை குறிப்பிட்டிருக்கிறார். சம்பவம் நடந்த திங்கட்கிழமை இரவு இவரும் அதே கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்து வரும் அவரது ஆண் நண்பரும் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக்கொண்டிருந்திருக்கின்றனர். இரவு 8 மணி அளவில் அங்கு திடீரென வந்த நண்பர் ஒருவர், “நீங்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்திருக்கிறேன்” என்று கூறி இதை டீனிற்கும் பிறருக்கும் அனுப்பி விடுவேன் என மிரட்டியிருக்கிறார். 


தன்னை காவல் துறை அதிகாரி என கூறிய அவர் மப்டியில் வந்ததாக கூறி, மாணவியின் ஆண் நண்பரை அடித்து உதைத்து அங்கிருந்து ஓட சொல்லியிருக்கிறார். இதனால் பயந்து போன அந்த ஆண் நண்பரும் அங்கிருந்து ஓடியிருக்கிறார். இதையடுத்து, அந்த மாணவி எவ்வளவு கெஞ்சியும் அந்த நபர் தன்னை வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புகாரில் தெரிவித்திருக்கிறார். 


தொடர் குற்றவாளி!


ஞானசேகரன், அண்ணா பல்கலை.மாணவியை மட்டுமல்ல, அவரைப்போல பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இவர் மீது 15 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கனிமொழி எம்.பி ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், “இதே நபர் நீண்டகாலமாகப் பல மாணவிகளை பாலியல் ரீதியாக அச்சுறுத்தி வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். 



அரசியல் பிரமுகர்களுடன் இருக்கும் புகைப்படங்கள்..


இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.. அதில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக அரசியல் பிரமுகர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.



மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், மா.சுப்பிரமணியனுடன் இருக்கும் போட்டோ, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் இருக்கும் போட்டோ ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.


யார் இந்த ஞானசேகரன்?


மாணவி கொடுத்த அங்கு அடையாளங்களை வைத்தும், அவர் அணிந்திருந்த ஆடைகளை வைத்தும் போலீஸார் இது குறித்த தீவர விசாரணையில் இறங்கினர். இதன் பேரில் ஞானசேகரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். இந்த கைது சேகரனுக்கு மொத்தம் 4 மனைவிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில், முதல் மனைவிக்கு 11 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், இவரது பாலியல் கொடுமை தாங்காமல், ஞானசேகரனை விட்டு அவர் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இரண்டாவது மனைவிக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும், அவரும் ஞானசேகரனுடன் சேர்ந்து வாழவில்லை என்றும் கூறப்படுகிறது. மூன்றாவது மனைவிக்கு மனைவிக்கு குழந்தை ஏதும் இல்லை என்றும், நான்காவது மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது. 


பகலில் பிரியாணிக்கடை..இரவில் ECR-ல் உல்லாசம்!


குற்றவாளி ஞானசேகரன், அடையாரில் பிரியாணிக்கடை வைத்துள்ளாராம். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.20,000 வரை லாபம் வருவதாக கூறப்படுகிறது. இரவு கடையை சாத்திய பின், நன்கு மது அருந்திவிட்டு தனது விலையுயர்ந்த ஜீப்பில் பந்தாவாக ஏறி ECR-ல் பல பேருடன் உல்லாசமாக இரவை கழிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 


தனது அந்தஸ்தை பயன்படுத்தி, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு செல்லும் ஞானசேகரன், அங்கு வரும் பெண்களையும் பேசி மயக்கி, தன் வலையில் விழ வைத்து வந்ததாகவும் போலீஸார் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது. 


மேலும் படிக்க | நடிகர் விஜய் யார்? சிரித்து கொண்டே பதிலளித்த சுப்பிரமணிய‌ சுவாமி!


மேலும் படிக்க | குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்... அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ