தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியின்போது, வாரிசுதாரர்களுக்கு பட்டா வழங்கக்கோரி மனு அளித்ததற்கு, இறந்து போனவரின் பெயருக்கே மீண்டும் பட்டா வழங்கி அதிர்ச்சி கொடுத்த சம்பவத்தால் மனு அளித்தவர் விரக்தியடைந்து, கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இறந்து போனவருக்கு பட்டா வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வருவாய் கோட்டத்துக்குட்பட்ட விளாத்திகுளம் தாலுகா வெவ்வால்தொத்தி கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் மனைவி அழகம்மாள். இவர், 2021ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி இறந்துவிட்டார். இவரது பெயரில் ஒரு ஏக்கர் 81 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவரது மகள்களான அன்னலட்சுமி, சரஸ்வதி, கோப்பம்மாள் ஆகியோர் வாரிசுச்சான்று மூலம் பட்டா வழங்கும்படி விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மனு அளிக்கப்பட்டது. 


மேலும் படிக்க | 8 முறை பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி வந்து என்ன பயன்? நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆவேசம்


அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு பட்டா மாறுதல் ஆன்லைன் மூலம் பதிவு ஏற்றப்பட்டது. நேற்று பட்டா மாறுதல் செய்யப்பட்டு விட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. இதையடுத்து, பட்டாவை பதிவு இறக்கம் செய்து பார்த்தபோது, முன்பு இருந்த இறந்து போன அழகம்மாளின் பெயருக்கே மீண்டும் பட்டா வழங்கி ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 


இதையடுத்து, கோவில்பட்டி கோவில்பட்டி கோட்டாட்சியர் ., ஜேன் கிறிஸ்டி பாயிடம் விளாத்திகுளம் தாலுகா மண்டல துணை தாசில்தார் சங்கரநாராயணன் வேண்டும் என்றே அதே பெயருக்க பட்டா வழங்கி இருப்பதாக அயன்வடமலாபுரம் கரிசல்பூமி விவசாய சங்கத் தலைவர் வரதராஜன் மனு அளித்தார். 


இறந்து போனவரின் வாரிசு பெயருக்கு பட்டா மாறுதல் கேட்டு விளாத்திகுளம் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தவருக்கு மீண்டும் இறந்தவரின் பெயரில் பட்டா வழங்கிய விவகாரத்தை கண்டு வருவாய்த்துறை உயர் அதிகாரிகளே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 


மேலும் படிக்க | அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ