TN Department of School Education FB Account Hacked : தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முகநூல் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த சில மணி நேரங்களாக, இந்த கணக்கில் இருந்து வினோதமான பதிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. விஜய் நடித்துள்ள, மாஸ்டர் படத்தின் காட்சிகள், இந்த முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபேஸ்புக் பக்கம் ஹேக்:


தமிழக அரசு, சில முக்கிய துறைகளுக்கு சமூக வலைதளங்களில் கணக்குகளை உருவாக்கி அதில் முக்கிய அப்டேட்டுகளை பதிவிட்டு வருகிறது. அந்த வகையில், பள்ளிகல்வித்துறைக்கும் ஒரு முகநூல் கணக்கை வைத்திருக்கிறது. இதில், அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் அறிவிப்புகள் வெளியாகும். மாணவ-மாணவிகள் செய்த சாதனைகள், பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் இதில் வெளியாகும். இப்படித்தான் இந்த முகநூல் பக்கம் இத்தனை நாட்களக இயங்கி வருகிறது. ஆனால், இன்று இந்த கணக்கில் சில வினோதமான நடவடிக்கைகள் காணப்பட்டன. 


மேலும் படிக்க | மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி... மூன்று நாள் சுற்றுப்பயணம்!


மாஸ்டர் பட காட்சிகள் பதிவேற்றம்:


விஜய் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான படம், மாஸ்டர். இதை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் இடம் பெற்றிருந்த சில காட்சிகள், தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளன. அதிலும், அந்த காட்சிகள் அனைத்துமே இந்தி மொழியில் டப் செய்யப்பட்டவையாக இருக்கின்றன. அதில், #Metaverse, #Superhit, #Vijay போன்ற ஹேஷ்டேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதை பார்த்த மக்கள், அதிர்ந்து போயுள்ளனர். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முகநூல் பக்கத்தை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவருமே தற்போது “இந்த அக்கவுண்டிற்கு என்ன ஆச்சு?” என குழப்பத்தில் இருக்கின்றனர். முகநூல் பக்கத்தை ஹேக் செய்தவர்கள், பயனாளரின் பெயர், பையோ ஆகியவற்றை எதுவும் செய்யவில்லை. விஜய் பட காட்சிகளை பதிவிட்டுள்ள அவர்கள், இதற்கு முன்னர் அந்த பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த வீடியோக்கள் எதையும் ஒன்றும் செய்யவில்லை.