ரயில் பயணிகளின் எமனாக மோடி உள்ளார்-சசிகாந்த் செந்தில் விமர்சனம்
Thiruvallur MP Sasikanth Senthil : ரயில் பயணிகளின் எமனாக மோடி உள்ளார் என திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார்.திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Thiruvallur MP Sasikanth Senthil : நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி எனவும், திருவள்ளூர் மக்களுக்கு நன்றி எனக்கூறியவர், தொடர் ரயில் விபத்துகள் நடந்து வருவதாகவும், ரயலின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது என்றும் கூறினார்.
சசிகாந்த் செந்திலின் முழு பேட்டி:-
“ரயில்வே லோகோ பைலட்கள் சரியாக தூங்கக்கூட முடியவில்லை எனவும் ஒவ்வொரு லோலோ பைலட்டும் 4 நாட்கள் தொடர்ந்து பணி வழங்குவதாக புகார் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். மேலும்,130 கி.மீ. வேகத்தில் இருந்து ஒரு கி.மீ.குறைத்தாலும் ரயில்வே நிர்வாகம் கேள்வி கேட்கிறார் எனவும் லோகோ பைலட் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2 நாட்கள் இரவு பணி வழங்கினால் ஒரு நாள் விடுப்பு வழங்க வேண்டும் என பேசிய அவர்,ரயிலில் பயணிக்கும் போது பாதுகாப்பாக செல்கிறோம் வந்தே பாரத் ரயிலை தொடங்கும் போது மோடி பல முறை வருகிறார், ஆனால் நடந்தது குறித்து அவர் அக்கறை காட்டவில்லை எனவும் கூறினார்.
கொரோனாவில் இருந்து மக்கள் மீது மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்று கூறிய சசிகாந்த் செந்தில், ரயில் பயணிகளின் எமனாக மோடி உள்ளார் என விமர்சித்தார்.
மேலும் படிக்க | திமுக கூட்டணி 40 எம்பிகள் வைத்து எதுவும் செய்யப் போவதில்லை - தங்கர்பச்சான்
“லோகோ பைலட்டுகளை ரயில்வே நிர்வாகம் சஸ்பென்ட் செய்துள்ளது.அவர்களின் தூக்கத்திற்கு யார் பொறுப்பு? மோடியின் கேரண்டி என பேசுபவர்கள், இதற்கு கேரண்டி சொல்வாரா?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “லோகோ பைலட்டுகள் முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் இல்லை. அதிவேக ரயிலை விடுவது முக்கியமில்லை, அதற்கு பாதுகாப்பு வேண்டும்” என்றார்.
“மோடிதான் எமன்..”
24-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசப்படும் எனவும், 10 உயிருக்கும் மோடி தான் எமன் என்பதே தமது பகிங்கர குற்றச்சாட்டு எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்வ் திருவள்ளூரில் உள்ள ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் எனவும், தேசிய பிரச்சினையாகவே இதனை கருதி இந்தியா முழுவதும் இது ஒலிக்கும் எனவும் கூறினார்.
வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலம் ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறிய அவர், மக்களை சரளமாக சந்திக்கும் எம்பியாக இருப்பேன் எனவும், முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பேன் என்றும் உறுதியளித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ