ஆண்டாள் கருவறைக்குள் இளையராஜா அனுமதிக்கப்படாதது ஏன்? வெளியான அறிக்கை!
Why Ilayaraja Was Denied Permission Into Nachiyar Thirukovil : இசையமைப்பாளர் இளையராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாதது குறித்த விவகாரம் தலை தூக்கி இருப்பதை அடுத்து, இதற்கான விளக்கத்தை இந்து சமய அறநிலையத்துறை கொடுத்துள்ளது.
Why Ilayaraja Was Denied Permission Into Nachiyar Thirukovil : பிரபல இசையமைப்பாளராஜ இளையராஜா, நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குள் சென்ற போது அங்கு அவருக்கு கருவறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது இது குறித்த விளக்கட்தை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.
அறிக்கை விவரம்:
விருதுநகர் மாவட்டம். ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயிலுக்கு 15.12.2024 அன்று இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் வருகை புரிந்ததன்பேரில், 16.12.2024 முதல் ஊடகங்களில் வரும் செய்தி குறித்து மேற்படித் திருக்கோயில் செயல் அலுவலர் பார்வை 2-ன் மூலம் பின்வருமாறு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 46(iii)- ன் கீழ் உள்ள திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயிலானது முதல் நிலை செயல் அலுவலர் மற்றும் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட அறங்காவலர் குழு கூட்டுப் பொறுப்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
பார்வை 2- காணும் குறிப்பில். 15.12.2024 அன்று இத்திருக்கோயிலுக்கு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் சுவாமி தரிசனத்திற்கு திருக்கோயிலுக்கு வருகை புரிந்தனர் என்றும்.இத்திருக்கோயிலில் ஆண்டாள் ரெங்கமன்னார். கருடாழ்வார். மூலவர் கருவறையிலும், கருவறையினை அடுத்த அர்த்த மண்டத்தில் ஆண்டாள். ரெங்கமன்னார். கருடாழ்வார் உற்சவரும் எழுந்தருளியுள்ளனர். எனவே. இத்திருக்கோயில் மரபு படியும், பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை திருக்கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை என்றும் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
15.12.2024 அன்று இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உடன் வருகை புரிந்த போது அவருடன் இணைந்து அர்த்த மண்டப வாசல் படி ஏறிய போது உடன் இருந்த ஜீயர் சுவாமிகள் மற்றும் திருக்கோயில் மணியம் அர்த்த மண்டபம் முன்பு இருந்து சாமி தரிசனம் செய்யலாம் என கூறிய உடன் அவரும் ஒப்புக் கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார் என்றும், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மட்டும் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார் என்ற விவரம் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, இளையராஜாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் கொடுத்திருக்கிறது.
மேலும் படிக்க | இளையராஜா சர்ச்சைப் பேச்சுகளும், சில ரிப்ளைகளும்.!
மக்கள் கருத்து என்ன?
இளையராஜாவை ஒரு கோயில் நிர்வாகம் இப்படி நடத்தியிருப்பது குறித்து இணையத்தில் பலர் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர், இளையராஜாவின் மகன் (யுவன் சங்கர் ராஜா) மதம் மாறியதால் இந்த அவமதிப்பு நேர்ந்திருக்கலாம் என ஒரு சிலர் கூற, இன்னும் சிலர் இளையராஜாவுக்கே இந்த நிலை என்றால், அந்த கோயிலுக்கு செல்லும் சாதாரண மக்களின் நிலையை நினைத்து பாருங்கள் என கூறி வருகின்றனர். மொத்தத்தில், இது சமூகத்தின் பார்வையில் தவறான செயலாகவே பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | கோவில் கருவறைக்குள் நுழைய இளையராஜாவிற்கு அனுமதி மறுப்பு! ஜுயர்கள் செய்த சர்ச்சை..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ