சென்னை: சட்டக் கல்லூரி மாணவர் தாக்குதல் விவகாரத்தில் இரண்டு காவல்துறையினர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டக் கல்லூரி மாணவரை சரமாரியாக தாக்கிய விவகாரம் தொடர்பாக, 2 காவலர்களை கட்டுப்பாட்டு அறைக்கு காவல் ஆணையர் இடமாற்றம் (Policers Transfer) செய்துள்ளார்.


வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த அப்துல் ரகீம், சட்டப் படிப்பு பயின்று வருகிறார். இவர் கடந்த 14-ம் தேதி நள்ளிரவு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.


\கொடுங்கையூர் எம்ஆர் நகர் சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார் அப்துல் ரகீமை மறித்து, முகக்கவசம் சரியாக அணியவில்லை எனக் கூறி அபராதம் விதித்துள்ளனர். 


அதற்கு அப்துல் ரகீம் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.


எனவே தனது சைக்கிளை வாங்குவதற்காக, கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு நடந்த சென்ற அப்துல் ரகீமிடம் அபராதம் கட்டுமாறு போலீசார் தெரிவித்தனர்.
இதனால், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ரஹீம்.



ஒரு கட்டத்தில் வாக்குவாதம்  முற்றி கைகலப்பாக மாறியது. ஆத்திரம் அடைந்த போலீஸார் மாணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், ரஹீமுக்கு படுகாயம் ஏற்பட்டது. அதோடு, காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் திருப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.


இதையறிந்த அப்துல் ரகீமின் பெற்றோரும், நண்பர்களும் காவல் நிலையம் சென்று நியாயம் கேட்டுள்ளனர். 


இந்த விவகாரம் பெரிதானதை அடுத்து, விசாரணை நடத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மாணவரை தாக்கிய விவகாரம் தொடர்பாக உத்திரகுமரன், பூமிநாதன் ஆகிய 2 காவலர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டனர்.


மாணவரை உள்ளாடையுடன் தனி அறையில் அடைத்து வைத்ததாகவும், போலீஸாரின் ஷூவை சுத்தம் செய்ய வைத்ததாகவும் பெற்றோர் தரப்பில் புகார் கூறப்படுகிறது. இந்தப் புகார் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.


ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR