அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோ முலம் பாடம்!!
அரசு பள்ளிகளில் ரோபோ முலம் பாடம் எடுப்பதற்கான செயல் விளக்கம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முன்னிலையில் செய்து காண்பிக்கப்பட்டது.
அரசு பள்ளிகளில் ரோபோ முலம் பாடம் எடுப்பதற்கான செயல் விளக்கம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முன்னிலையில் செய்து காண்பிக்கப்பட்டது.
பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ரோபோக்களை, வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரோபோ மூலம் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதனை விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைப்பார் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் பள்ளிகளில் ரோபோ பாடம் எடுப்பதற்கான செயல் விளக்கம் நடைபெற்றது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோரும் அப்போது உடன் இருந்தனர்.